Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கொழும்பு குப்பைகளை புத்தளம் , அறுவக்காடு பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை, நல்லாட்சி அரசு கண்டும், காணாமல் இருப்பது கவலையளிக்கிறதென, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் நேற்று (10), கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
ஒரு சமூகத்துக்கு பிரச்சினை என்று வரும்போது நாம் இனம், மொழி, பிரதேசம் என்று பார்ப்பது கிடையாது. இந்த நாட்டில் வாழும் மக்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தால் அதனை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.
இந்த பிரதேசத்தில், மெந்து தொழிற்சாலை, நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஆகிய இரண்டு திட்டங்கள் மக்களின் எதிர்ப்புக்களை மீறி அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு திட்டங்களாலும் புத்தளத்தில் வாழும் சகல மக்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் மூன்றாவது திட்டமாக கொழும்பு குப்பைகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே, இந்த குப்பைத் திட்டமானது, சுற்றாடலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதுடன், புத்தளத்தில் உள்ள உப்பளங்கள், மீற்பிடித்துறை, விவசாயம் என்பவும் பாதிப்புக்குள்ளாகும் என, மக்கள் அச்சமடைகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
14 Jul 2025
14 Jul 2025