Janu / 2025 ஜூன் 05 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது
இந்நிலையில் குறித்த வழக்கு வியாழக்கிழமை (05) அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களான விவசாயிகள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு தொடுனர்கள் சார்பில் முல்லைத்தீவு பொலிஸார் , தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சட்டத்தரணி ஒருவரும் ஆஜராகி இருந்தனர்
இதேவேளையில் சந்தேக நபர்கள் சார்பாக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த 12க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்
நீதிபதி தனது கட்டளையில் விசேடமாக, குறித்த சந்தேக நபர்கள் மீது வழக்கை தொடர்ந்து நடத்தக்கூடிய அடிப்படை முகாந்திரங்கள் இல்லை எனவும், குறித்த பிரதேசம் இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்குரிய பிரதேசம் என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத்தொடுனர் தரப்பே ஏற்றுக்கொண்டதை விசேடமாகக் குறிப்பிட்டு இருவரையும் விடுவித்த தோடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
சண்முகம் தவசீலன்

4 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago