Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 31 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளையில் இருந்து வெல்லம்பிட்டிய பகுதி வரையான பிரதேசங்களில் செயற்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் இந்த பிரிவு செயற்படவுள்ளது.
அவிசாவளையில் இருந்து வெல்லம்பிட்டிய வரையான பகுதியில் களனி கங்கைக்கு அண்மைய பகுதிகளில் வாழும் மக்களை அச்சுறுத்தி அவர்களுக்கு சொந்தமான இடங்களை குறைந்த விலையில் வாங்கி, அதனை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறானவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கப்பம் பெறும் நபர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக இந்த புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
சட்டவிரோதமான மற்றும் அநாவசியமான முறையில் இடங்களை கைப்பற்றுதல், கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் 071 36 80 001 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
29 minute ago