Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜூலை 06 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ஓட்டங்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் 269 ஓட்டங்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ஓட்டங்களை சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹாரி புரூக் 158 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ஓட்டங்களை எடுத்து மொத்தம் 244 ஓட்டங்களை முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ஓட்டஙகளுடனும், கருண் நாயர் 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் இன்று (06) நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 83 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 427 ஓட்டங்களை அடித்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 161 ஓட்டங்களை அடித்தார். இதனையடுத்து இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.
இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் 269 ரன்களும், 2-வது இன்னிங்சில் 161 ஓட்டங்களும் அடித்துள்ளார். இதன் மூலம் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150+ ஓட்டங்களை அடித்த வீரர் என்ற ஆலன் பார்டரின் மாபெரும் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்த சாதனையை ஆலன் பார்டர் (150 மற்றும் 153 ஓட்டங்களை) 1980-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக படைத்திருந்தார். அவரின் இந்த 45 ஆண்டு கால சாதனையை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago