Kogilavani / 2017 ஜூன் 23 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றத்தில், நேற்று (22) சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றம் சபாநாயகர், கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக்காலை 10:30க்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே, சபாநாயகர், மேற்படி சட்டமூலம் தொடர்பில் அறிவிப்பொன்றை விடுத்தார்.
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் வாபஸ் பெற்றுக்கொள்வதாக, உயர் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபைக்கு அறிவித்தார்.
இதனையடுத்தே, சபையில் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ.சுமந்திரன், பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா, அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கருத்துரைத்தனர்.
முன்னதாக சபாநாயகர் தனது அறிவிப்பில்,
“குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில், அரசியலமைப்பின் 121 (1) சரத்தின் கீழ் உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்திலிருந்து, இந்தச் சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக, நீதியமைச்சர் தீர்மானித்துள்ளார் என்று, நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
“இதற்கமைய இந்த சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மனுவை வாபஸ்பெறுவதாக மனுதாரர் அறிவித்துள்ளார்.
அதற்கமைவாக, இது தொடர்பான மனுவை நிராகரித்துள்ளதாக, நாடாளுமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது” என்றார்.
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Dec 2025
28 Dec 2025