2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

’குற்ற அலையை கட்டுப்படுத்தவும்’

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்ற அலையை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படாது .மாறாக குற்றவியல் நடவடிக்கை முறை சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலைக் கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுகின்றது. எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? வென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கேள்வி எழுப்பினார்  

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (25) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறுகையில்,
 
இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து ஆராயப்பட்டது. இந்த வன்முறை சார் அலையை தடுக்க முறையான திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

எனவே, இந்த குற்ற அலையை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படாது என்றும், மாறாக குற்றவியல் நடவடிக்கை முறை சட்டம் மேலும் பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .