Editorial / 2025 ஜூன் 22 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை (22) குளவி கொட்டுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு விஹாரையில் நடத்தப்படும் அறநெறி பாடசாலைக்குச் சென்றவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்
விஹாரையில் அமைந்துள்ள பிரதான சாலையின் அருகே அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில் உள்ள ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டில் அறநெறிப் பள்ளியின் மாணவர் ஒருவர் வீசிய கல்லால் குளவிகள் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குளவிகளால் தாக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக மித்தெனிய, கட்டுவன, காரியதித்த மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
46 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
59 minute ago