Janu / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர், திங்கட்கிழமை (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த, 45 வயதுடைய கூலித் தொழிலாளி என தெரியவந்துள்ளது.
இவர் திங்கட்கிழமை (06) காலை இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI-277 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபர் தான் கொண்டு வந்த போதைப்பொருள் அடங்கிய பயண பொதியை, விமான நிலையத்தின் பொதி விநியோக பகுதியில் கைவிட்டு தப்பியோட முயன்றபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
சோதனையின் போது, அந்த பயண பொதியிலிருந்த 12 சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் இருந்த சொக்லேட்டுகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக 11 கிலோ 340 கிராம் எடையுடைய "குஷ்" போதைப்பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டி.கே.ஜி. கபில
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago