Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேடமான சந்திப்புக்கள் எவற்றையும் நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
கொழும்பு - 07 இல் அமைந்துள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
அதேபோல் தன்னை ஐ.தே.மு வின் பிரதமர் வேட்பாளராக களமிறக்க கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தான் கையளித்த கடிதம் தொடர்பான எந்த பதிலும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும், தேர்தல் அருகில் இருப்பதால் விரைவில் வேட்பாளரை அறிவிக்க வேண்டுமெனவும் கோரினார்.
இந்த ஊடகச் சந்திப்பில் அமைச்சர்களான, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago