Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று(27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.கவுக்கு ஆட்சியமைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்தே ஐ.தே.க தனக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒருபோதும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனத்திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால், அவர்கள் த.தே.கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்கலாம் எனவும் அவர் கூறினார்.
எனினும், அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியடமே இருப்பதாகவும், இதற்கு பொதுத்தேர்தலுக்குச் செல்வதே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago