Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சமாதானத்திற்கான நடைபயணத்தில்’ (Walk for Peace) பங்கேற்று வரும் ‘ஆலோகா’ (Aloka) எனும் நாய், அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் சிக்கி புதன்கிழமை (22) அன்று சுகயீனமடைந்துள்ளது. இதனையடுத்து, அந்த விலங்கிற்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.
கே. டி. லால்காந்த பங்கேற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இத்தகவலை வெளியிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்:
“ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் இந்த நாய் மற்றும் நடைபயணத்தில் பங்கேற்கும் பிக்குகளுடன் , புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க முயற்சித்தனர். இவ்வாறான செயற்பாடுகள் நடைபயணத்தில் பெரும் தாமதத்தையும், நிர்வாக ரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்தின.”
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறினார். இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இரண்டு சந்தர்ப்பங்களில் ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) குழு அழைப்பு ஊடாக தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரின் தலைமையில், மகா சங்கத்தினர் மற்றும் ‘ஆலோகா’ எனும் நாயின் பங்கேற்புடன் இந்த நடைபயணம் தம்புள்ளையிலிருந்து ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago