2026 மே 02, சனிக்கிழமை

கைதிகளின் இறுதி சடங்குகள் குறித்து இன்று முடிவு

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலைமையின்போது உயிரிழந்த கைதிகளின் இறுதிக்கிரியை முறை தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு இன்று(16) வழங்கப்படவுள்ளது.

வத்தளை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, முரண்பாட்டினை ஏற்படுத்திய கைதிகள் மற்றும் மோதல் ஏற்பட்ட முறைமை குறித்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று(15) சுமார் 35 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .