2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு 3 மாதம் பொதுமன்னிப்பு காலம்

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியா நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கு எவ்வித தண்டணையோ, அபராதமோ விதிக்கப்படாது அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக 3 மாத பொது மன்னிப்பு காலத்தை  கொரியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் இந்த பொதுமன்னிப்பு காலமானது அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், குறித்த 3 மாத பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் தாமாகவே அங்கிருந்து வெளியேறாவிட்டால், அவர்களை கைதுசெய்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அவர்கள் மீண்டும் கொரியாவுக்குள் வரமுடியாத வகையில் 10 வருட தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக, வெ ளிநாடுகளுக்கு கொரியா அறிவித்துள்ளதாக, ​கொரியாவிலுள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .