Niroshini / 2021 மே 18 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த மனைவி உயிரிழந்து மூன்றாவது நாளே கணவரும் உயிரிழந்த சம்பவமொன்று, பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகாரி பிரிவில், நேற்று முன்தினம் (16) இடம்பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுக்கு இலக்காகியிருந்த, பொகவந்தலாவ - சிறிபுர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய், பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 13ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
அப்பெண் உயிரிழந்த போது, அவருக்கான பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் அறிக்கை, நேற்று முன்தினம் பிற்பகலே கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்போதே, அவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் இரவே, அப்பெண்ணின் கணவரான எஸ்.வடிவேல் (வயது 76) என்பவரும் திடீரென உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதென, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவ்விருவருடைய சடலங்களும், டிக்ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது, அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த அறுவர், சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago