Nirosh / 2021 ஜனவரி 24 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பொகவந்தலா நிரூபர் எஸ்.சதீஸ்)
பொகவந்தலாவ - மோரா தோட்ட பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் இன்று (24) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த சிகிச்சை நிலையத்தில் சமைக்கப்படும் உணவில் புளுக்கள் காணப்படுவதாகவும், மலசலகூட வசதிகள் இல்லை எனவும் தெரிவித்த தொற்றாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமும் சோறும் சம்பலுமே உணவாக வழங்கப்படுவதாகவும், குடிப்பதற்கு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுவதில்லை, கொத்தமல்லி நீரும் குடிப்பதற்கு வழங்கப்படுவதில்லை எனவும் தொற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொகவந்தலா பொலிஸார் இராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததோடு, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago