2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா தொற்றுக்கு ஆயுர்வேத வைத்தியம்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் நோய்களை தடுப்பதற்கு, ஆயுர்வேத வைத்திய தீர்வை கண்டறிவதற்கான  விசேட கலந்துரையாடல், நேற்று (03)  சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, வைரஸ் தாக்கங்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஆயர்வேத மருத்துவம் மூலமான தீர்வைக்  கண்டறியும் வகையில், சுதேச வைத்திய முறை மூலம் மேற்கொள்ளக்கூடிய சுகாதார பாதுகாப்பு முறை தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆயர்வேத திணைக்கள கூட்டுத்தாபன அதிகாரிகள், சுதேச பாரம்பரிய வைத்திய துறையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது, கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காக ஆலோசனைகள், சிகிச்சைகள், சுதேச  வைத்திய முறையின் மூலம் மேற்கொள்ளக்கூடிய சுகாதார பாதுகாப்பு முறைகள்  தொடர்பில்,  பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவது குறித்தும்  விரிவாக  கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .