2025 ஜூலை 16, புதன்கிழமை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட புத்தளம் நபர் குணமடைந்தார்

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் நகர சபைக்குட்பட்ட கடையான்குளம் பகுதியில், கொரோனா தொற்றுக்கு இலக்காகி, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபரொருவர் பூரண  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்தோனேசியாவுக்கு சென்ற குறித்த நபர், மார்ச் மாதம் 16ஆம் திகதி புத்தளத்துக்கு வருகைதந்த  நிலையில், சுகாதார பிரிவினரின் ஆலோசனையின் படி, அவர் 14 நாட்கள் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார்.

அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருக்கும்போது, மார்ச் மாதம் 28 திகதி சுகவீனம் காரணமாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக பரிசோதனைக்காக அன்றைய தினமே குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், குருநாகல் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, அவர் பூரண குணமடைந்து நேற்று (10) வீடு திரும்பியுள்ளார். 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .