2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்தது

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கேரளா இளைஞருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை இந்திய மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மாணவர், தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். 

சீனாவில் இருந்து இதுவரை 806 கேரளா திரும்பியுள்ளதாகவும், நேற்று மட்டும் 173 பேர் கேரளா வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .