2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸ் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸிலிருந்து பாடசாலை மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த வழிகாட்டல்கள் அடங்கிய  பட்டியலை, கல்வி அமைச்சு சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது. 

அமைச்சின் வழிகாட்டல்கள்,  சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும் எனவும் இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 மேலதிக தகவல்களை அறிய,  பாடசாலைக்கு அருகிலுள்ள சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தையோ அல்லது கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் ஊட்டச்சத்து பிரிவையோ அல்லது 0112-784872 / 0112-784163 ஆகிய தொலைபேசி இலக்கங்களின்  மூலமாகவோ தொடர்புகொள்ளலாம் என,  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .