Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதம வேட்பாளர் என்ற ரீதியில் நாடு முழுவதும் பயணிக்க வேண்டியுள்ளதால், எந்த சிரமமும் இல்லாமல் வெற்றிப்பெறக்கூடிய ஒரு மாவட்டத்தில் போட்டியிட சஜித்துக்கு வாய்ப்பளிப்பது தவறல்ல என, ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தால், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்படும் வேட்பாளர் வெற்றிடத்துக்கு தான் பெயரிடும் ஒருவரே போட்டியிட வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேதமாச கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
31 minute ago