Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜனவரி 31 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுதந்திர தினத்துக்கான ஒத்திகைகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் 15, பெப்ரவரி 3ஆம் திகதி திங்கட்கிழமையன்று மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி, யசோதரா வித்தியாலயம், மியூசியஸ் கல்லூரி, சென். பிரிஜட்ஸ் கல்லூரி, Lady’s College, Colombo International School, Wycherley International School ஆகியனவே இவ்வாறு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுதந்திர தினப் பயிற்சிகளில் ஈடுபடும் பாதுகாப்புத் தரப்பினரின் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் கொழும்பு மஹானாம கல்லூரி, பொல்வத்தை புனித மைக்கேல் ஆண்கள் பாடசாலை, பொல்வத்தை புனித மேரி மகளிர் கல்லூரி (கனிஷ்ட வித்தியாலயம் உட்பட) கொழும்பு 12 மிஹிந்து மஹா வித்தியாலயம், கொழும்பு 10 அல் ஹிதாயா கல்லூரி, கொழும்பு 10 அசோக்கா வித்தியாலயம் போன்றவற்றுக்கும், அன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
39 minute ago