Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, கொழும்பை அண்மித்த நகரங்கள் பலவற்றில் சட்டவிரோதமாக குடிநீர் பெற்ற 560 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து கடந்த 6 மாதங்களில் 25 மில்லியன் ரூபாய் அபராத தொகை அறிவிடப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, மட்டக்குளி, பாமன்கடை, மாளிகாவத்தை , கோட்டே, மஹரகம, களணி ஆகிய பிரதேசங்களின் 4361 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டணம் செலுத்தப்படாமையால் நீர் துண்டிப்பு செய்யப்பட்டிருந்த நேரங்களில் சட்டவிரோதமாக மீண்டும் நீர் இணைப்பை பெற்ற 170 பேர், நீர்மானிக்கு வெளியே சட்டவிரோதமாக நீரைப் பெற்ற 350 பேர், உரியமுறையில் நீரைப் பெறாமல் சட்டவிரோதமாக நீரைப் பெற்ற 40 பேர் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago