2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொழும்புக்கு வருகிறது அமெரிக்க அன்பளிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 05 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம்  26ஆம் திகதி, அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக இந்தக் கப்பல் கையளிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நோக்கி சனிக்கிழமை (03) பயணத்தை ஆரம்பித்துள்ள கப்பல், நவம்பர் முதல் வாரத்தில் வந்தடையும் என்று கடற்படை அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ கையளிப்பின் பின்னர், இந்த கப்பல் P627 என்ற இலக்கத்தின் கீழ் இலங்கை கடற்படையின் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் குறைந்தது 14,000 கடல் மைல் தூரம் வரை ஊடுருவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .