2026 மே 01, வெள்ளிக்கிழமை

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் குறைகிறது

J.A. George   / 2021 மார்ச் 23 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, குருநாகல், கம்பஹா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது.

காற்றின் திசையில் மாற்றம், குப்பைகளை எரித்தல் மற்றும் நாளாந்தம் நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்குக் காரணம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.00 மணியளவில் கம்பஹாவில் காற்றின் தரம் 117ஆகவும் கொழும்பில் 95 ஆகவும் பதிவாகியுள்ளது. அத்துடன், கண்டி பகுதியில் காற்றின் தரம் 91ஆக குறைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .