2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு நகர ஆணையாளராக பாலித நியமனம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரைக் காலம் சிக்கலில் நிலவிய, கொழும்பு நகர ஆணையாளர் பதவிக்கு பாலித நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆணையாளர்  நாளை (24) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

நகர ஆணையாளராக முன்னர் பதவி நிலைகளை வகித்துள்ள இவர், 2018 ஆம் ஆண்டு மாநகர செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

முன்னாள் ஆணையாளர்  வீ.கே.ஏ.அனுரவின் வெற்றிடத்துக்கு பதில் கடமையாற்றுவதற்காக, மேல் மாகாண முதல​மைச்சரின் செயலாளர் சந்திராணி சமரகோன் நியமிக்கப்பட்டிருந்தார்.

வீ.கே.ஏ.அனுர, தன்னை இடமாற்றம் செய்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .