Nirosh / 2021 மே 28 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டம் முழுவதும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விநியோகிப்பதற்காக 8 ஆயிரம் மொபைல் வாகனங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த வாகனங்களுக்கு மாத்திரமே வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர், இந்த வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதைகளில் மாத்திரமே பயணிக்க முடியுமெனவும், இதேவேளை இந்த ஆலோசனைகளைப் பின்பற்றாத வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 577 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கே இவ்வாறு பொருள்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது பிரதேசங்களுக்கு இந்த வாகனங்கள் வரவில்லை என்றால், இது தொடர்பில் அப்பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்க முடியும். அல்லது 0112 369139 என்கிற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருள்களை கொழும்பு மக்களுக்கு விநியோகிப்பதற்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களில் சில சில நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், முடிந்தளவு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago