J.A. George / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதால் பாலியல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சர்வதேச ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இதனை தெரிவித்துள்ளார்.
எனவே சமூக ஊடகங்கள் அல்லது பிற ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற தகவல்களுக்கு பொதுமக்கள் ஏமாறாமல், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே விசேட வைத்திய நிபுணர் அஜித் கரவிட்ட இந்த கருத்துக்களை தெரிவித்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago