Editorial / 2026 மார்ச் 18 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

உண்மையான நெருக்கடிகளை மறைத்து, ஜனாதிபதி அழகிய கதைகளைக் கூறி வருவதால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
"முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துவிட்டுச் சென்றார். ஆனால், தற்போதைய ஜனாதிபதிக்குத் தேடிக் கண்டுபிடிக்க முடியாதவாறு தப்பியோட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 'கஜு கான சீயா' (ரணில் விக்ரமசிங்க) நாட்டுக்காகச் சேமித்து விட்டுச் சென்ற 6 பில்லியன் டொலர் கையிருப்பு மாத்திரமே இன்று எஞ்சியுள்ளது."
"இந்த அரசாங்கம் திருடவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் எந்த வேலையையும் செய்யாததால்தான் திருடவில்லை. ஏதாவதொரு வேலையைச் செய்யத் தொடங்கினால், முதல் முயற்சியிலேயே தோற்று விடுகிறார்கள்.
பொருளாதார வீழ்ச்சிக்குத் தான் பொறுப்பல்ல எனவும், உலகப் போரே காரணம் எனவும் ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். எதனையும் கண்மூடித்தனமாக நம்பும், சிந்திக்கும் திறனற்ற மக்கள் இருக்கும் ஒரு நாடு ஒருபோதும் முன்னேறப் போவதில்லை."
"அரசாங்கம் எதனைக் கையிலெடுத்தாலும் அதில் தோல்வியே மிஞ்சுகிறது. எரிவாயு மற்றும் 'QR' முறைமையிலும் அதுதான் நடந்துள்ளது. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் உள்ளது என்றால், ஏன் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன? கப்பல்கள் வரிசையாக வரும் என்று கூறியவர்கள், இப்போது ஏதோ ஒரு நாளில் ஒரு கப்பல் வரும் என்ற கதைகளைக் கூறுகிறார்கள்."
வாக்குறுதிகள் அனைத்தும் இன்று வேடிக்கையாக மாறியுள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்திடம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இல்லை எனவும் கடுமையாக விமர்சித்தார்.
16 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago