Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
“எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் யார் அவர் என தேடுகிறது. இன்று கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். எமது வேட்பாளரை அறிந்துக்கொள்ள நாடு விரும்புகிறது. முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம்” என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி விவாத நிகழ்வில் வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் முகப்புத்தகத்தில் இன்று பதிவிட்டுள்ள அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது வெற்றி வேட்பாளரை நாம் அறிவிப்போம். ஆனால் அந்த அறிவிக்கும் வேளையை நாமே தீர்மானிப்போம்.
இம்முறை வேட்பாளரை பெயரிடும் சந்தர்ப்பத்தை நாம் விரும்பி, ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்கி உள்ளோம்.
2010, 2015 வருடங்களில் வெளியில் இருந்து வேட்பாளர் வந்த காரணத்தால், இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளே இருந்து வேட்பாளர் வருவது மிகவும் நியாயமானது. இதை நானே முதலில் கூறினேன்.
ஆகவே ஐதேக பெயரிடும் வேட்பாளரை நாம், ஜனநாயக தேசிய முன்னணி தலைமை குழுவில் அங்கீகரிப்போம்.
இங்கு இப்போது ரணில், சஜித், கரு ஆகிய மூன்று பெயர்கள் பேசப்படுகின்றன. எவர் வந்தாலும் அவர் வெறும் வேட்பாளர் மட்டுமல்ல. அவர் எங்கள் டீம் லீடர்.
இங்கே டீம் என்ற தலைமைக்குழு முக்கியமானது. நாம் ரணில் ஆட்சிக்கு, சஜித் ஆட்சிக்கு, கரு ஆட்சிக்கு வித்திடவில்லை. எமக்கு தேவை சட்டத்தின் ஆட்சியே.” என தனது பதிவில் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
53 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago