Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைவிட வேலைத்திட்டம் என்ன என்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு முக்கியமானது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனடன் பேச்சுவார்த்தை நடத்தி எதிர்காலத்தில் ஒப்பந்தம் செய்துகொள்வதாக இருந்தால் அது கோட்டாபய ராஜபக்ஷவுடன் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவை தோல்வியடைந்தால் தனியான வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இரண்டு வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எதிர்பார்ப்புகள் இல்லை என்றும், கோட்டாபய ராஜபக்ஷவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பேச்சுவார்தையில் ஈடுபவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago