Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
உரிய கோரமின்மையால், நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள், 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கு முன்னரே இன்று (12) நிறைவடைந்தன.
சுகாதார அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளயினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம், இன்று (12) இடம்பெறவிருந்தது.
இதன்போது, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கள், சபையில் கோரமின்மையை எடுத்துக்காட்டியதோடு, இந்த யோசனையைக் கொண்டுவந்த சுதர்ஷனி எம்.பியும் சபையில் இல்லையென்பதை எடுத்துக்காட்டினார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சபைக்கு அழைக்கும் கோரமணி, 5 நிமிடங்கள் வரை ஒலிக்கவிடப்பட்ட போதும், 9 எம்.பிக்கள் மாத்திரமே சபையில் இருந்துள்ளனர்.
இதன்படி, சபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில், மாலை 6.30க்கு நிறைவடையவிருந்த சபை நடவடிக்கைகள், 4.15க்கே நிறைவடைந்தன.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago