Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலை தும்போவில எனுமிடத்தில் கடந்த 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட மாலைதீவுகள் பிரஜையான ஹூசைன் ரஸீமின் படுகொலை தொடர்பில், மாலைதீவுகளின் பிரஜையொருவரை (வயது 21) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெப்பிலியானவையில் வைத்தே குறித்த சந்தேகநபரை நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாலைதீவுகளில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அதில் சிலர் இலங்கைக்கு தப்பிவந்துள்ளனர்.
அவ்வாறு தப்பிவந்திருந்த மாலைதீவுகள் பிரஜையான ஹூசைன் ரஸீமின் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்வதற்கு, ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது. வானொன்றைக் கொள்வனவு செய்வது போல, அந்த நபரை கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர்.
அக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் அவருடைய கையிலிருந்த கைக்கடிகாரத்தை பொலிஸார் கைப்பற்றினர்.
படுகொலை செய்யப்பட்ட மாலைதீவுகளின் பிரஜை, அந்த நாட்டில் இடம்பெற்ற இரண்டு படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்று அறியமுடிகின்றது.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அலைபேசி ஆற்றொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் சுழியோடிகளினால் அந்த அலைபேசி மீட்கப்பட்டது. அந்த அலைபேசிக்கு வருகின்ற குறுந்தகவல்கள், கொலை செய்யப்பட்டவரின் கைக்கடிகாரத்துக்கும் வரும். அதனடிப்படையிலேயே இக்கொலையின் சந்தேகநரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தக் கைக்கடிகாரம்இ 6 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட அலைபேசி ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியானது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago