2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

காணாமற்போனமைக்கான சான்றிதழ்: சட்டமூல வரைவுக்கு அங்கிகாரம்

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமற்போனமைக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான சட்டமூலத்தின் வரைவுக்கு, அமைச்சரவையினால் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இறப்புகளைப் பதிதல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், 2010 இல. 19 என்ற சட்டத்தினைத் திருத்தல் தொடர்பாகவே, இந்தச் சட்டமூலம் குறிப்பிடுகிறது.

அமைச்சரவையினால் இது அங்கிகாரமளிக்கப்பட்டுள்ள நிலையில், இது வர்த்தமானி மூலம் வெளியிடப்படுமெனவும், நாடாளுமன்றத்தில் இதைச் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகுமெனவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

பத்தாயிரக்கணக்கான இலங்கையர்களின் உறவினர்கள் காணாமற்போயுள்ள நிலையில், காணாமற்போனமை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது உதவுமென அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .