2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொம்பனிவீதியில் 10 பெண்கள் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனிவீதியில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், குறைந்தது 10 பெண்கள் வரை, நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரதேச சட்டம் அமுலாக்கல் பிரிவினர் நடத்திய திடீர் சோதனையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியை அடுத்தே குறித்த சோதனை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள பெண்கள், 29 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் ஹம்பாந்தோட்டை, வெயாங்கொட, சீதுவ, மதுகம, றாகம, அளுத்தரகம, மெத்தெனிய, லிதுல, ஹந்தபன்கொட, திஸ்ஸமஹாராம மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்கள், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X