Editorial / 2025 நவம்பர் 19 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களின் வரவு -செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தேசிய மக்கள் படையை (NPF) ஆதரித்த எட்டு உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) யைச் சேர்ந்த உறுப்பினர்களில் எட்டு உறுப்பினர் பதவியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது,
கட்சி எடுத்த அறிவுறுத்தல்களுக்கு மாறாகசெயல்பட்ட எட்டு உறுப்பினர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என புதன்கிழமை (19) அன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்சியின் அடுத்த மத்திய விவகார சபைக் கூட்டத்திற்கு அறிக்கை அளிப்பதன் மூலம் எட்டு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
பதியத்தலாவை பிரதேச சபையின் வீரசிங்க தர்ஷன விதானகே, கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் முஹம்மது ரினோஸ், நாத்தாண்டிய பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுரகுமார, அமில் எரங்க, மற்றும் ரஷ்மி மல்ஷானி, பொல்கஹவெல பிரதேச சபையின் அத்துல குமார, பெல்மதுல்ல பிரதேச சபையின் உறுப்பினர் ஜி.கே.சுமேத லக்மால் ஆகியோரின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் கூறுகிறது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago