2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொலைக் குற்றச்சாட்டில் இருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரியப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகுக்கலை நிலையமொன்றில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

29 மற்றும் 24 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும், மிரிஹான பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், அலைபேசி மற்றும் சிம் ஆகியவற்றையும் சந்தேகநபர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களை, கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X