2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளில்  நாளை மறுதினம் சனிக்கிழமை (05) இரவு முதல் 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பேஸ்லைன் வீதியின் களனி பாலத்துக்கு அருகில் இருந்து தெமட்டகொடை  சந்தி வரையான பிரதான பாதை மற்றும் சகல உள்ளக வீதிகள், ​ஹெட்டி வீதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கொழும்பு 13, 14,15 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

சனிக்கிழ​மை இரவு 9 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிவரையான 8 மணித்தியாலங்களுக்கு  இந்த பிரதேசங்ளுக்கான நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .