2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சஜித் இன்று முதல் மீண்டும் களத்தில்

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இன்று (17) மக்களை சந்திக்கவுள்ளார்.

அதற்கமைய, ஜனாதிபதி தேர்தலில் 55 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான பொதுக்கூட்டங்கள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

கொலன்னாவை பகுதியில் பிற்பகல் 1.30 மணிக்கும், கோட்டை பிரதேசத்தில் பிற்பகல் 04.00 மணிக்கும் மொரட்டுவையில் பிற்பகல் 05.00 மணிக்கும் இந்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், நாளை (18) கம்பஹா மற்றும் அத்தனகலவில் மக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாசவுடன் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .