2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

செட்டிகுளத்தில் குண்டுகள் ; கட்டுநாயகவில் மூவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான குண்டுகள் குறித்து பொலிஸா் விசாரணைகள் தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மூன்று தமிழ் பிரஜைகள்  இந்திய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

புதன்கிழமை (29)  அன்று காலை  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், அவர்களை, விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அந்த மூவரும், புதன்கிழமை (29) அன்று அதிகாலை 12.37 மணிக்கு இந்தியாவின் சென்னையில் இருந்து 6E-1175 என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் வவுனியா, செட்டிகுளம், காந்தி நகரில் வசிக்கும் 30 வயதுடையவர். மற்றை இருவரும் வவுனியா, செட்டிகுளம், மெனிக் பாம், 3வது தொகுதி முகவரிகளில் வசிக்கும் 27 வயதுடையவர்கள்.

கைது செய்யப்பட்ட மூவரும் புதன்கிழமை (29)  அன்று சுமார் 04.30 மணியளவில் கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் பலத்த பாதுகாப்பின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்திலிரந்து  அழைத்துச் செல்லப்பட்டனர்.

சமீபத்தில் கிரிபத்கொட பகுதியில் கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், அங்கு கைது செய்யப்பட்டு நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

டி.கே.பி கபில

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X