2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சடலங்களை தகனம் செய்ய அறிவுறுத்தல்

Gavitha   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, எனினும் இன்னும் உரிமை கோரப்படாத 19 சடலங்களையும் தகனம் செய்வதற்கு கொழும்பு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. இந்த சடலங்களை இனியும் கொழும்பில் உள்ள பிரேத அறையில் வைக்க முடியாது என்று மாநகர சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு உள்ள சடலங்கள், பெரும்பாலானவை, கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம் மக்களுடையது என்றும் இவை தகனம் செய்யப்படும் என்ற காரணத்தாலேயே, இவற்றை பொறுப்பேற்க உறவினர்கள் மறுக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லீம்களின் சடலங்களை புதைப்பதற்கு அரசாங்கம் இன்னமும் அறுவுறுத்தவில்லை. இந்நிலையில், உறவினர்களால் பொறுப்பேற்காத சடலங்கை, மாநகர சபையின் செலவில் தகனம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்த நபர்களின் உடல்களை தகனம் செய்ய எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க உறவினர்கள் மறுத்ததன் விளைவாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது என்று பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டொக்டர் ஹேமந்தா ஹெரத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அரசாங்கத்துன் நிதியைப் பயன்படுத்தி உடல்களை தகனம் செய்ய அரசாங்கத்தால் முடிந்தாலும், உறவினர்கள் தங்கள் முடிவைத் தெரிவித்து சுகாதார அமைச்சுக்கு அறிக்கை அளிக்காதமையாலேயே, இது தொடர்பாக சட்டமா அதிபரின் தலையீட்டைப் பெற அரசாங்கத்தைத் தூண்டியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில், உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்வது குறித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட அமைச்சு தயாராக இருப்பதாக டொக்டர் ஹேமந்தா ஹெரத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .