Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
சட்டக் கல்வி கட்டாயக் கல்வியாக்கப்படவேண்டும். அதனூடாக, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமெனத் தெரிவித்த, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஐரோப்பிய நாடுகளில் சட்டக்கல்வி கட்டாயக் கல்வியாக காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு நிலை இல்லை என்றார்.
கல்வி இராஜாங்க அமைச்சருக்கான கடமைகளை, பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சில், நேற்று (27) பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துரைத்த அவர், சட்டக் கல்வியைக் கட்டாயக் கல்வியாக்கி, பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். இதனூடாக, பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மற்றும் இடர்பாடுகளைத் தவிர்க்க முடியும். விழிப்புணர்வு ஏற்படுவதுடன் சுய பாதுகாப்பும் பலப்படும் என்று தெரிவித்த அவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதனை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
வடக்கு,கிழக்கு, மலையக பகுதிகளில் கற்றலுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்த அவர், வௌ்ளவத்தையில், தமிழ்ப் பாடசாலை அமைப்பதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துவேன் என்றார்.
நாட்டில் 30 சதவீதமாக வாழும் தமிழ் மக்களுக்கு கௌரவம் செலுத்தும் வகையிலேயே தனக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கில் கல்வி நிலை, யுத்தத்துக்கு முன்னர் சிறப்பாகக் காணப்பட்டது. யுத்தத்தின் போது, மந்த நிலையை அடைந்தது. எனினும், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வித் திட்டங்களினால் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு, அங்கு கல்வி வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது என்றார்.
அதேபோல, தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வேன் என்று தெரிவித்த அவர், வௌ்ளவத்தையில் தமிழ்ப் பாடசாலை அமைக்கும் கனவை நனவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago