S. Shivany / 2021 மார்ச் 15 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரிந்துரைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் மதிப்பீட்டுப் பணிகள் முடிவடைந்ததும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பின், அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என, அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago