Editorial / 2017 நவம்பர் 29 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு கோரி, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனுவை, நாளை (30) விசாரணைக்கு எடுப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று மறுப்புத் தெரிவித்தது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு, டிசெம்பர் 4ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கெதிரான நகர்த்தல் மனுவொன்றை, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவால், இம்மாதம் 27ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த நகர்த்தல் மனுவை, அவசர விடயமாகக் கருதி, நாளைய தினம் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபரால் கோரப்பட்டிருந்த நிலையில், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
28 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
2 hours ago
3 hours ago