Editorial / 2017 ஜூலை 07 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலுக்கட்டாயமாகக் காணாமல் போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெறவில்லை என்றும், அந்த சட்டமூலம் பிறிதொரு தினத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (05) கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “இந்தச் சட்டமூலம் தொடர்பில் பத்திரிகைகள் சில தவறான செய்தியை, இன்று (வியாழக்கிழமை) பிரசுரித்துள்ளன.
புதன்கிழமை சமர்ப்பிக்கவிருந்த மேற்படி சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெற்றுகொண்டுவிட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது தவறானதாகும். அந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் விரைவில் சமர்ப்பிக்கும்” என்றார்.
53 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
55 minute ago
2 hours ago