Freelancer / 2025 நவம்பர் 02 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த பட்டா ரக வாகனத்தை நேற்று கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வடமராட்சி குடத்தனைப் பகுதியில் பட்டா ரக வாகனமொன்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிய பின்னர் வரணி மாசேரி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனத்தை மாசேரி பகுதியில் கொடிகாமம் பொலிஸார் இடைமறித்துள்ளனர்.
எனினும் அந்த பட்டாரக வாகனம் பொலிஸாரை மோதும் வகையில் பயணித்து தப்பியோடியுள்ளது.
இந்த நிலையில் பொலிஸார் பட்டாரக வாகனத்தை துரத்திச் சென்று பருத்தித்துறை- கொடிகாமம். வீதியில் கறுக்காய்த்தீவுப் பகுதியில் வைத்து முள்ளுக் கட்டையை வீதியின் குறுக்காக போட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் போது இலக்கத் தகடுகளற்ற கப் ரக வாகனத்தை கைவிட்டு கடத்தற்காறர்கள் 6 பேர் தப்பித்தோடியுள்ளனர். சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை இலக்கத் தகடுகளற்ற கப் ரக வாகனத்துடன் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (a)

7 minute ago
14 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago