2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத துப்பாக்கிகளை திருப்பி கொடுக்க கால அவகாசம்

George   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை திருப்பித் தருவதற்கான பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மே மாதம் 06ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது' என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
'இக்காலத்தில் தம்மிடம் இருக்கும் துப்பாக்கிகளை திருப்பி கொடுப்போருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

பொது மன்னிப்பு காலத்துக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் அதனையடுத்து முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X