Niroshini / 2021 மே 10 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மகேஸ்வரி விஜயனந்தன்
ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை அடுத்து ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே பெருந்தோட்ட தொழிற்சங்களுக்கான மாதாந்த சந்தாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் பல இடைநிறுத்தியுள்ளன எனச் சாடிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், இந்தா சந்தாவை நிறுத்தி கம்பனிகள் பகல் கனவு காண்கின்றன என்றார்.
“சந்தாவை நிறுத்துவதன் மூலம் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, நடைமுறைத் திட்டங்கள், தொழிலாளர்களின் உரிமைகளை இழக்கச் செய்துவிடலாமென பெருந்தோட்டங்கள் நினைத்தால், அக்கனவு ஒருபோதும் பலிக்காது” என்றார்.
பெருந்தோட்ட கம்பனிகள் சில, தொழிற்சங்கங்களின் மாதாந்த சந்தாவை நிறுத்தியுள்ளமை குறித்து வினவியபோதே, அவர் தமிழ்மிரருக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித நேயத்துடன் தொழிற்சங்கங்கள் சேவையாற்றுவதால், சந்தா கிடைத்தாலும் கிடைக்காவிடினும் மலையக மக்களுக்கான சேவையை தாம் முழுமையாக தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், இவ்விடயம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி தொழில் ஆணையாளரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
“தொழில் பிணக்கு ஏற்பட்ட ஒரு தொழிலாளி, அது தொடர்பான கலந்துரையாடலுக்கு, பிரதித் தொழில் ஆணையாளர் அல்லது தொழில் ஆணையாளர் அலுவலகத்துக்குச் செல்லும்போது, குறித்த தொழிலாளி ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இல்லையென்றால் அந்தப் பிணக்குகளை சட்டபூர்வமாக கையாள முடியாது” என்றார்.
“கம்பனிக்காரர்கள் திட்டமிட்டு தொழிலாளர்களை எந்தவொரு தொழிற்சங்கத்திலும் அங்கத்துவர் இல்லாமல் செய்துவிட்டால், அவர்களை எது வேண்டுமென்றாலும் செய்யலாம் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்” என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago