Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில், விரிவான அறிக்கையொன்றை தம்மிடம் வழங்குமாறு, சட்டமா அதிபர் தப்புல டீ லிவேரா அறிவுறுத்தியுள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபருக்கே, சட்டமா அதிபர், இன்று இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
அதற்கமைய, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் எத்தனை பேர், அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட காரணங்களை உள்ளடக்கிய தகவல்களை தமக்கு அனுப்புமாறு, சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை இந்த மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி, திசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
25 minute ago
45 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
45 minute ago
52 minute ago
2 hours ago