Janu / 2026 மார்ச் 11 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் வங்கி அட்டையை (ATM Card) திருடி, அதிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை எடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புதன்கிழமை (11) அன்று காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மாலை, ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், மறுநாள் குறித்த சந்தேகநபரின் பெண் உறவினர் ஒருவர் சந்தேக நபரிடம் இருந்த வங்கி அட்டை திருடப்பட்டு, அதன் மூலம் 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக காலி குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், எல்பிட்டிய - வல்அம்பகல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
8 hours ago