2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சந்தர்ப்பம் தருமாறு, ஜனாதிபதிக்கு லால்காந்த கடிதம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவையாளர்கள் முகம்கொடுக்கின்ற 7 விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேசிய தொழிற்சங்க மையத்துக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான கே.டி.லால் காந்தவினால் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு அடிப்படை சம்பளத்தில் சேர்க்காமை, அரச ஊழியர்களின் உரிமைகள் குறைப்பு, நன்மைகளை இல்லாமல் செய்தல், தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்குவதாக இணங்கிய 2,500 ரூபாயை வழங்குதல், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்தல், மனித சக்தி ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்காமை, வாழ்க்கைச்செலவு புள்ளி ரூ.280 என வர்த்தமானியில் பிரசுரிக்காமை உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்த பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே நேரத்தை ஒதுக்கிதருமாறு கோரப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .